அனைவருக்கும் வணக்கம்
மூன்று நாட்கள் முதல் ஆறு நாட்கள் வரை பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த பள்ளி EMIS வலைதளத்தில் Student click செய்த பின் Student List ல் உள்ள Potential Dropout click செய்தால் மூன்று முதல் ஆறு நாட்கள் வரை பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் பெயர் பட்டியல் இருக்கும், இதில் Absentees Reason - தேர்வு செய்யவும் பின்பு Students will come by within -என்ற இடத்தில் மாணவன் மீண்டும் பள்ளிக்கு வரும் தேதியை குறிப்பிடவும், இறுதியாக Action - click செய்தவுடன் Updated successfully என வரும்.
இப்பணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஒவ்வொரு நாளும் EMIS வலைதளத்தில் Potential dropout ஆக காண்பிக்கப்படும் மாணவர்களுக்கு சரியான காரணத்தையும் மீண்டும் பள்ளிக்கு வரும் தேதியையும் குறிப்பிட்டு Update செய்தல் வேண்டும். மேலும் பள்ளி ஆரம்பித்தது முதல் இன்று வரை பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு சரியான காரணத்தை நாளை (05.07.23) பிற்பகல் 1.00 மணிக்குள் Update செய்து முடிக்கும்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து Update செய்த விவரத்தை உறுதிப்படுத்துமாறு சார்ந்த பள்ளி ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment