அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் முன்னறிப்பின்றி ஆய்வு - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, July 5, 2023

அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் முன்னறிப்பின்றி ஆய்வு - CEO Proceedings

 

முன்னறிவிப்பின்றி குழு ஆய்வு-தகவல் தெரிவித்தல் - தொடர்பு


திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டம் நாள்: 16 .05.2023


பார்வையில் காணும், திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடை பெற்ற அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளை முன்னறிப்பின்றி ஒரே நாளில் ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது.


அதன்படி 2023-24ம் கல்வியாண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள அரசு/அரசு உதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜூலை மாதம் முதல் முன்னறிவிப்பின்றி குழு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. 


இக்குழு ஆய்வின் போது பள்ளி வளாகத் தூய்மை, கழிவறை தூய்மை, மேற்கூரைத் தூய்மை, வகுப்றைகள் தூய்மை, குடிநீர் வசதி, EMIS பதிவுகள், மாணவர்களின் தமிழ் ஆங்கிலம் வாசிப்புத்திறன், கணித அடிப்படை செயல்பாடுகள், எண்ணும் எழுத்தும் வகுப்பறை செயல்பாடுகள், கற்றல் விளைவுகள், பாடக்குறிப்பேடு மற்றும் பிற கல்வி இணை செயல்பாடுகள், குறைதீர் கற்பித்தல் நடவடிக்கை மற்றும் பள்ளிக்குட்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்குச் செல்லும் மாணவர்களின் விவரங்கள் உட்பட அனைத்தும் சார்ந்து பள்ளிக்கு ஓர் அலுவலர் அல்லது ஆசிரியர் பயிற்றுநரை நியமித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.


குழு ஆய்வு நடைபெறும் நாளன்று அந்தந்த வட்டாரத் தலைமையிடம் அல்லது அருகில் உள்ள இடத்தில் ஆய்வு அலுவலர்களால் அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் மீளாய்வுக் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Post Top Ad