BUDGET 2023 - ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது - வரி அடுக்குகள் முழு விவரம் - Asiriyar.Net

Wednesday, February 1, 2023

BUDGET 2023 - ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது - வரி அடுக்குகள் முழு விவரம்

 



புதிய வரி நடைமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.5 லட்சம் வரை இருந்த வரம்பு தற்போது ரூ. 7 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


மேலும், வருமான வரி அடுக்குகள் 7 ல் இருந்து 5 ஆக குறைக்கப்படும். வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சத்தை கடக்கும் பட்சத்தில்,


*3 லட்சம் வரை வருமான வரி இல்லை


*3 லட்சம் முதல் 6 லட்சம் வரை 5 சதவீத வருமான வரி


*6 லட்சம் முதல் 9 லட்சம் வரை 10 சதவீதம்


*9 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 சதவீதம்


*12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 சதவீதம்


*15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வருமான வரி. இவ்வாறு நிர்மலா சீதாராமன்

அறிவித்துள்ளார்.


பாரம்பரிய வழக்கப்படி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதலைப் பெற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் எதிர்பார்த்தபடியே, வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது. தற்போது பழைய, புதிய என 2 விதமான வருமான வரி முறைகள் பின்பற்றப்படுகின்றன. புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கு வருமான வரிப்பிரிவு 80சி, 80டியின் கீழ் எந்த வருமான வரிச்சலுகையும் கிடைக்காது. இதில் ஏற்கனவே ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை வாங்குவோருக்கு வரி கிடையாது. தற்போது இது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


அதோடு, புதிய முறைக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வரி விதிப்பு விகிதங்கள் 5 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வாங்குபவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வாங்குபவர்கள் 5% வரி செலுத்த வேண்டும். ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வருமானம் ஈட்டுவோர் 10% வரி செலுத்த வேண்டும். ஆனால், ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுவர்களுக்கு பிரிவு 87ஏ-ன் படி ரூ.25,000 வரி தள்ளுபடி சலுகை வழங்கப்படும்.


இதன் மூலம் அவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டி இருக்காது. ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் சம்பளம் பெறுவர்களுக்கு 15 சதவீதமும், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ.15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதமும் வரி விதிப்பதாக புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை ரூ.50 ஆயிரத்திற்கான நிலையான கழிவு சலுகை ரூ.5 லட்சத்திற்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது அனைத்து சம்பளதாரர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆண்டு சம்பளம் ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக வாங்குபவர்களும் ரூ.52,500க்கான நிலையான கழிவு சலுகையை பெறுவார்கள். அதே சமயம், பழைய முறைப்படி வருமான வரி செலுத்துவோருக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.



No comments:

Post a Comment

Post Top Ad