தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி நாள் மாற்றம் - Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, October 28, 2022

தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி நாள் மாற்றம் - Proceedings

 

பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி ) செயல்முறைகள், சென்னை-06


ந.க.எண்: 04632/வி2/இ1/2022 நாள் : 2710.2022


பொருள்: பள்ளிக்கல்வி- 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சியளித்தல் - பயிற்சி நாள் மாற்றம் செய்தல் - தொடர்பாக,


பார்வை:

1. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு

2. GlGr 600601-6, பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.04632/வி2/இ1/2022 நாள்:17.10.2022


பார்வை 1-இல் காணும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி பார்வை-2 இல் காணும் செயல்முறைகளின் படி26.10.2022 முதல் (Batch 16, 18 and 20 to 42) மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள பில்லர் மையத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் Batch 20, 25, 29, 30, 32 மற்றும் 33 இல் இடம் பெற்றுள்ள தலைமையாசிர்களுக்கான பயிற்சி நாள் மாற்றம் செய்யப்பட்டு, இணைப்பு -1இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி நாள் மற்றும் மையங்களில் தலைமைப்பண்புப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இப்பயிற்சியில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பட்டியல் (இணைப்பு -2) மற்றும் முதன்மைக் கருத்தாளர்களின் பட்டியல் (இணைப்பு-3) இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிர்களை கீழ்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றி பணியிலிருந்து விடுவிக்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


1. பயிற்சிக்கு வரும் தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக் கருத்தாளர்கள் தங்களது மடிக்கணினியுடன் (Laptop) தவறாமல் பயிற்சியில் கொள்ளவேண்டும். கலந்து


2. பயிற்சி தொடங்கும் முந்தைய தினம் மாலை 05.00 மணிக்கு பிறகு இரவு 8.00 மணிக்குள் பயிற்சி வளாகத்திற்குள் வந்து தங்களது பெயரினை பதிவு செய்யவேண்டும். மேலும் கண்டிப்பாக பயிற்சி மையத்திலேயே தங்கி பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.


3. அனைத்து தலைமையாசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக் கருத்தாளர்கள் பயிற்சி நிறைவடையும் மூன்றாம் நாளில் மாலை 6.00 மணி வரை, பயிற்சியில் இருத்தல் வேண்டும்.


இப்பயிற்சி சார்பான விவரங்களை பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக் கருத்தாளர்களுக்கும் தவறாமல் தெரிவிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


ஓம்/-வெ.ஜெயக்குமார்

இணை இயக்குநர்( தொழிற்கல்வி)


இணைப்பு:

1. பயிற்சி நடைபெறும் மையங்களின் பட்டியல்.

2. தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல்.

3. முதன்மைக் கருத்தாளர்களின் பெயர் பட்டியல்


பெறுநர்:

அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்.

நகல்


1. மாநிலதிட்ட இயக்குநர்,ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி. சென்னை-6 - தக்கநடவடிக்கைக்காக பணிந்தனுப்பப்படுகிறது.


2. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை - 6 - தக்கநடவடிக்கைக்காக பணிந்தனுப்பப்படுகிறது.


3.முனைவர்.வை.குமார்,இணை இயக்குநர்,(பயிற்சி) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தகவலுக்காகஅனுப்பப்படுகிறது.


நிறுவனம்,

சென்னை-06


(இயக்குநர்வழியாக)


4. திருமதி.ஞா.ஏஞ்சலின்ரூபி, உதவிப்பேராசிரியை, மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். சென்னை-6 (இயக்குநர்வழியாக) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.


5. திரு அ.குருநாதன், (கைபேசி 9442040420) உதவி திட்டஒருங்கிணைப்பாளர் (EDC), முதன்மைக்கல்வி அலுவலகம், மதுரை (முதன்மைக்கல்விஅலுவலர்வழியாக) தகவலுக்காகஅனுப்பப்படுகிறது.






Post Top Ad