நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வில் இடம் பெறும் வினாத்தாள் அமைப்பு முறை குறித்து மாதிரி வினாத்தாள் வெளியிட வேண்டும் என மாணவர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 10ம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் உயர்கல்வி சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் அமைப்பு முறையை ஒவ்வொரு ஆண்டும் அரசு தேர்வுத்துறை சார்பில் வெளியிட வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
சில பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதுடன் மாதிரி தேர்வும் நடத்தப்படுகின்றன. வினாத்தாள் அமைப்பு முறையும் கற்று தரப்படுகின்றன.
பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வினாத்தாள் அமைப்பு முறை ஒவ்வொரு பாடத்திலும் எந்த அலகில் எத்தனை மதிப்பெண் கேள்விகள் எந்த பிரிவில் இடம் பெறும் என்பதற்கான வழிகாட்டுதல் இல்லாத சூழல் உள்ளது.
எனவே அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயாராகும் வகையில் தமிழக பள்ளிக் கல்வி துறையின் தேர்வுத் துறை சார்பில் பொது தேர்வு வினாத்தாள் அமைப்பு முறையை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment