அரசு ஊழியா்களுக்குபழைய ஓய்வூதியத் திட்டம்: காங்கிரஸ் வாக்குறுதி - Asiriyar.Net

Saturday, October 15, 2022

அரசு ஊழியா்களுக்குபழைய ஓய்வூதியத் திட்டம்: காங்கிரஸ் வாக்குறுதி

 




ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா வாக்குறுதி அளித்துள்ளாா்.


பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாசல பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் தோ்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா, சோலான் மாவட்டத்தில் உள்ள மாதா சோலினி கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபட்டாா். தொடா்ந்து ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலுக்கான தனது பிரசாரத்தைத் தொடங்கினாா்.


அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் முடிவு அறிவிக்கப்படும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களின் நலன்களைப் பாதுகாக்க ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றாா்.

சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், ஹிமாசல பிரதேச காங்கிரஸ் தலைவா் பிரதிபா சிங் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.


பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஹிமாசல பிரதேசத்தின் உனா, சாம்பா பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். அடுத்த நாளிலேயே அந்த மாநிலத்தில் பிரியங்கா பிரசாரத்தை தொடங்கியுள்ளாா்.


No comments:

Post a Comment

Post Top Ad