வாடகை தாய் மூலம் குழந்தைபெறும் பெண் பணியாளர், ஆசிரியருக்கு 270 நாட்கள் விடுப்பு: தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Tuesday, October 25, 2022

வாடகை தாய் மூலம் குழந்தைபெறும் பெண் பணியாளர், ஆசிரியருக்கு 270 நாட்கள் விடுப்பு: தமிழக அரசு உத்தரவு

 



தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 


சமூகப் பாதுகாப்பு இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலித்த அரசு, பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 12 மாத மகப்பேறு விடுப்பு நிகழ்வில் காணப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் உடல் திறன் இழத்தல் மற்றும் தேறுதல் போன்ற சிரமங்கள், மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனமுடன்  பராமரிக்க எதுவாக தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கி ஆணையிடுகிறது.


இவ்விடுப்பு அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் பொருத்தும்.  மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான ஒப்பந்தத்தை சட்ட ரீதியாக பதிவு செய்து இருத்தல் வேண்டும்.


குழந்தை பிரசவித்த மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும். மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அக்குழந்தை பிறந்த நாளிலிருந்து விடுப்பு வழங்கலாம். இவ்விடுப்பு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad