15.03.2022 உத்தேசத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ( முறையான கண்காணிப்பாளர் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ) பணியாளர்களுக்கு 27.10.2022 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை -6 பள்ளிக் கல்வி வளாக டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டட கூட்ட அரங்கில் நேரடிக் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு நடைபெறஉள்ளது .
மேற்காண் கலந்தாய்வில் உதவியாளர்கள் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு 15.03.2022 உத்தேசத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்களில் வரிசை எண் 1 முதல் 55 வரை உள்ள அனைத்து பணியாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது . மேலும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பதவி உயர்வு 15.03.2022 உத்தேசத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்களில் வரிசை எண் 103 முதல் 143 வரை உள்ள அனைத்து பணியாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment