✒️அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
✒️மாணவர்களுடைய காலாண்டு தேர்வின் மதிப்பெண்களை கீழ்கண்ட வழிகாட்டுதல்களின்படி EMIS PORTAL -ல் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
✒️மதிப்பெண் பதிவேற்றம், ஆசிரியர்களின் தனிப்பட்ட EMIS ID (INDIVIDUAL 8 DIGIT ) பயன்படுத்தி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வகுப்பாசிரியர்கள் மட்டுமே , தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும். பொதுவான SCHOOL LOGIN -ல் உள்ளீடுக்கான வசதி இல்லை. ஆசிரியர்கள் தாங்கள் பதிவேற்றம் செய்தவற்றை , SCHOOL LOGIN -ல் பார்க்க முடியும்.
✒️ வகுப்பாசிரியர்கள் தங்கள் மாணவர்களின் மற்ற பாடங்களுக்கான மதிப்பெண்களை, அந்தந்த பாட ஆசிரியர்களிடம் கேட்டு பெற்று , பதிவேற்றத்தை முடிக்க வேண்டும்.
✒️தற்பொழுது 6 முதல் 12 ஆம் வகுப்பாசிரியர்களுக்கு மட்டும் activate செய்யப்பட்டுள்ளது.
✒️அனைத்து படங்களுக்கான மதிப்பெண்களை தயார் செய்துகொண்டு, உள்ளீடுகளை மேற்கொள்ளவும் , ஏனெனில் , அனைத்து பாடங்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் மட்டுமே save செய்ய முடிகிறது.
No comments:
Post a Comment