ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி தேர்வர்கள் தங்களின் வினாத் தாள்கள் மற்றும் விடைகளைப் பார்ப்பது எப்படி என்பது குறித்துக் காணலாம்.
அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
ஏற்கெனவே ஒத்தி வைப்பு
தாள் 1-ற்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்,14-10-22 முதல் 20-10-22 வரை இருவேளைகளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தாள்1-ற்கான கணினி வழித் தேர்வு (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல்19.10.2022 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது.
இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில்அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி மாலை 6.00 மணிக்கு பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படுகிறது.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
Step 1— தேர்வர்கள்
https://cgpvtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.isp
என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்
Step 2 — பதிவு எண்ணை உள்ளிடவும்
Step 3 — பிறந்த தேதியைத் தேர்வு செய்யவும்
Step 4 — தேர்வு தேதியைத் தேர்வு செய்ய வேண்டும்
Step 5 — Batch தேர்வு செய்யுங்கள்
Step 6 — Captcha எழுத்துகளை உள்ளீடு செய்யுங்கள்
Step 7 — சப்மிட் கொடுக்கவும்
Step 8 — விதிமுறைகளை க்ளிக் செய்து பார்க்கவும்
Step 9 — 'Click here to view attempted Question Paper' என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
இவ்வாறு தேர்வர்கள் தங்களின் வினாத் தாள்கள் மற்றும் விடைகளைப் பார்க்கலாம்
No comments:
Post a Comment