தேர்தல் - 4 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து CEO உத்தரவு. - Asiriyar.Net

Monday, October 4, 2021

தேர்தல் - 4 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து CEO உத்தரவு.

 

உள்ளாட்சித் தேர்தல் வருகிற 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. 


வேலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரை ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளும் தேர்தல் வாக்குச் சாவடி மையங்களாக செயல்படவுள்ளதாலும் , 05.10..2021 மற்றும் 08.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் தேர்தல் பணி ஒதுக்கீட்டு ஆணை பெறுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லவுள்ளதால் 05-10-21 மற்றும் 08-10-21 ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. 


மேலும் , தேர்தல் நடைபெறும் நாளான 06-10-2021 அன்றும் 09-10-2021 அன்று அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பணியினை மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் நடைபெறும் நாட்களான 06-10-21 மற்றும் 09-10-21 ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. 


07-10-2021 அன்று வியாழக்கிழமை பள்ளி வழக்கம் போல் செயல்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .





Post Top Ad