ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இன்றைய (28.10.2021) முக்கிய அறிவிப்பு. - Asiriyar.Net

Friday, October 29, 2021

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இன்றைய (28.10.2021) முக்கிய அறிவிப்பு.

 

TRB Press News Today (28.10.2021)

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை 1 ஆகிய ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு வாயிலாக நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் அரசாணை நிலை எண் . 144 , பள்ளிக் கல்வி ( ப.க .2 ( 1 ) துறை , நாள் 18.10.2021 ன்படி , ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. எனவே மேற்காணும் அரசாணையின்படி உச்ச வயது வரம்பினை உயர்த்தியும் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடத்திற்கு பணிநாடுநர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும் போது M.P.Ed. , கல்வித் தகுதி ஒருவருடப் பயிற்சி காலம் முடித்தவர்கள் ( 2002 - ற்கு முன்பு முடித்தவர்கள் மட்டும் ) பதிவேற்றம் செய்வதற்கும் , மேலும் , முதுகலைப் பட்டப்படிப்பு முதல் வருடம் பயின்று பின்னர் B.Ed. , பட்டம் முடித்து அதன்பின்னர் முதுகலைப் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு சேர்ந்து பட்டம் பெற்றவர்கள் பதிவேற்றம் செய்வதற்கு மென்பொருளில் தேவையான மாற்றங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.









No comments:

Post a Comment

Post Top Ad