புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
முன்னிலை- முனைவர் . சா.சத்தியமூர்த்தி
ந.க.எண். 1031/«1/2021
நாள் 27.10.2021
பள்ளிக் கல்வித் துறை- புதுக்கோட்டை வருவாய் மாவட்டம்வேலை நிறுத்தம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் 20162017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது- போராட்ட காலம் மற்றும் தற்காலிக பணி நீக்க காலம் பணிக்காலமாக முறைப்படுதிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது- அறிவுரைகள் வழங்குதல்- சார்பு பார்வை -1. அரசாணை எண். 9 /பமநிசீது நாள் 02.02.2021
2. அரசாணை எண். 113/ மனிதவள மேலாண்னைத் துறை நாள்
13.10.2021)
மேற்காண் பொருள் சார்ந்து பார்வை-2ல் கண்டுள்ள அரசாணை தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் இத்துடன் இணைக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் அரசு / நகராட்சி நிதியுதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
அரசாணையில் தெரிவித்துள்ளவாறு வேலைநிறுத்தப் போராட்ட காலத்தினை பணிக்காலமாக முறைப்படத்திட அலுவலகத் தலைவர்கள் உரிய செயல்முறை ஆணைகளை பிறப்பித்திடவும் தற்காலிக பணிநீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்திட சம்பந்தப்பட்ட நியமன அலுவலர்கள் பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய செயல்முறை ஆணை பிறப்பித்திடவும், பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணிக்கால ஊதியத்தினை பெற்று வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் இதுசார்ந்து கீழ்க்காண் அறிவுரைகளை கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
1. வேலை நிறுத்த போராட்ட காலத்தினை பணிக்காலமாக கருதிட அலுவலகத் தலைவர்கள் உரிய செயல்முறை ஆணை பிறப்பிக்க வேண்டும்.
2. செயல்முறை ஆணை விபரம் பணிப்பதிவேட்டில் முறையாகவும், எந்த அரசாணையின்படி என்பதையும் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட வேண்டும் (".............. ஆண்டு போராட்ட கால / தற்காலிக பணி நீக்க காலங்களை முறைப்படுத்துதல் " என்று தலைப்பு எழுதிட வேண்டும்.)
3. பணிப்பதிவேட்டில் போராட்ட கால நாட்கள் பற்றிய பதிவு விவரம் இடம்பெற்றுள்ள பக்கத்திலோ அல்லது கடைசி பதிவு இடம்பெற்ற பக்கத்திற்கு பிறகோ தற்போது முறைப்படுத்தப்படும் செயல்முறை ஆணை பற்றிய விவரங்களை பதிவு செய்திட வேண்டும்.
4. பணிப்பதிவேட்டில் ஏற்கனவே போராட்ட கால நாட்கள் பற்றிய பதிவு விவரம் இடம்பெற்றுள்ள பக்கத்தில் முறைப்படுத்தப்படும் பதிவுகளை பதிவு செய்ய இடம் இல்லை எனில் அப்பதிவிற்கு கீழே முறைப்படுத்தப்படும் பதிவு இடம் பெறும் பணிப்பதிவேட்டின் தொகுதி மற்றும் பக்க எண்ணை சிவப்பு மையினால் குறிப்பிடவும்.
5. பணிப்பதிவேட்டில் LLP - விடுப்பு கலத்தில் போராட்ட கால விடுப்பு நாட்கள் பதிவுக்கு அருகில், முறைப்படுத்தப்பட்ட விபரங்களை எழுதிட வேண்டும்.
6. பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் நாட்களுக்கு பணிக்காலம் சரிபார்த்த பதிவுகள் பதியப்பட வேண்டும்.
7. போராட்ட கால விடுப்பு நாட்களால், வருடாந்திர ஊதிய உயர்வு உரிய நாளில் வழங்கப்பட்டு, அதன் பணப்பயன் தள்ளி வழங்கப்பட்டு இருப்பின், அதன் விபரமும் உரிய செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டு முறைப்படுத்திட வேண்டும்.
8. பணிக்காலமாக முறைப்படுத்திட பிறப்பிக்கப்படும் செயல்முறை ஆணையிலேயே, ஆண்டு ஊதிய உயர்வு முறைப்படுத்தப்படும் விபரமும் இடம்பெறுதல் வேண்டும். மேண்காண் அறிவுரைகளை பிற்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் , வேலை நிறுத்த போராட்ட காலம்/ தற்காலிக பணி நீக்க நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்திட மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
-- -/oM
முதன்மைக் கல்வி அலுவலர்