ஆசிரியர்களே, தமிழில் துணையெழுத்துகள் வகைகளை அறிந்துகொள்ளுங்கள் - மாணவர்களுக்கு கூற பயனுள்ள தொகுப்பு - Asiriyar.Net

Friday, October 22, 2021

ஆசிரியர்களே, தமிழில் துணையெழுத்துகள் வகைகளை அறிந்துகொள்ளுங்கள் - மாணவர்களுக்கு கூற பயனுள்ள தொகுப்பு

 



தமிழில் எழுதப்படும் துணையெழுத்துகள், எழுத்துருக்கள் ஆகியவற்றை விளக்கும் படம் இது. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை அறிந்திருக்கும் நம்மில் பலர்க்கு மேல்விலங்கு,     கீழ்விலங்கு என்றால் என்னென்று தெரியாது. 



தமிழில் எழுதப்படும் ஒவ்வோர் எழுத்தும் எத்தகைய  சேர்ப்பு வடிவத்தினால் அதன் வரிசையில் இன்னோர்  எழுத்தாகிறது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு வரைவுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அவற்றையும்  அறிந்திருக்க வேண்டும். மூத்த  தமிழாசிரியர்களிடையே அறியப்பட்டிருக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்கள் புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களிடையே பரவலாகாமல் இருப்பதைப் பார்க்கிறோம். 



அவர்களுக்கும் நம் மாணார்க்கர்களுக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்களின் பட்டியல் உதவும். துணையெழுத்துகளை விளக்கி எழுதப்பட்ட கட்டுரை நக்கீரன் இணையத்தில் சொல்லேர் உழவு பகுதியில் வெளியாகியிருக்கிறது. அதனையும் படித்துத் தெளிவுறுக. இணைப்பு முதல் கருத்துப் பெட்டியில்.







No comments:

Post a Comment

Post Top Ad