05.11.2021 & 06.11.2021 (வெள்ளி - சனி) ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Asiriyar.Net

Friday, October 29, 2021

05.11.2021 & 06.11.2021 (வெள்ளி - சனி) ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 


வருகின்ற நவம்பர் மாதம் 4ம் தேதி (04.11.2021 - வியாழக்கிழமை) அன்று தீபாவளி பண்டிகை மகிழ்ச்சிகரமாக மாணவர்கள் கொண்டாட உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா கால கட்டத்தில் முடங்கி இருந்த மாணவர்களுக்கு இவ்வருட தீபாவளி பண்டிகை உற்சாகத்தை அளிப்பதாக உள்ளது. பண்டிகைக்கு அடுத்த நாள் என்பதால் மாணவர்களின் வருகையும் மிகக்குறைவாகவே இருக்கும்.


தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து 05.11.2021 & 06.11.2021 (வெள்ளி - சனி) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதால் அனைத்து வெளியூர் விடுதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பேருந்துகளில் சென்று திரும்ப பயன் உள்ளதாகவும், தங்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் விழாவினை கொண்டாடி ஆரோக்கியமான மனநிலையுடன் தொடர்ந்து கற்றல் கற்பித்தல் பணி சிறப்பாக அமைய ஏதுவாக இருக்கும்.


எனவே, 05.11.2021 & 06.11.2021 (வெள்ளி - சனி) ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


பொதுச்செயலாளர் நகல் : 

1. முதன்மை செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது. 

2. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.










No comments:

Post a Comment

Post Top Ad