நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். காலையில் இருந்து மாலை வரை முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.
காலையிலிருந்து மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். தினமும் ஏற்கெனவே அறிவித்தபடி சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். அதாவது, திங்கள் கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் கிழமை அவர்களுக்கு விடுமுறை. மீண்டும் புதன்கிழமை அவர்கள் வரவேண்டும்.
எந்த வகுப்பினரை எந்த நாட்களில் வர வைக்க வேண்டும் என்பதை அந்த அந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம். ஏனென்றால் ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில் வெவ்வேறு எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பார்கள். எனவே அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அந்த அந்த பள்ளி மாணவர்களை திங்கள்கிழமை வரவைக்க வேண்டுமா? அல்லது செவ்வாய்க்கிழமை வரவழைக்க வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். இதுபோன்று ஒரு வகுப்பிற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும்.
ஒரு வகுப்பறையில் 20 மாணவ மாணவிகள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பலாம். வழக்கம்போல் சத்துணவு வழங்கப்படும். ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படுவோர் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வழக்கம் போல் சத்துணவு வழங்கப்படும். ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படும் மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment