கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பெற்றோர்களை வலியுறுத்துங்கள்.
பள்ளி வளாகத்தினுள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குங்கள்.
தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்துங்கள்.
மாணவர்கள், ஆசிரியர்களின் நடமாட்டம் குறைவாக இருக்குமாறு வகுப்புகளையும் வகுப்பறைகளையும் மாற்றியமையுங்கள்.
இருக்கையிலோ திறந்தவெளியிலோ சிறு குழுவாக மாணவர்கள் உணவு உண்ணுமாறு அறிவுறுத்துங்கள்.
வகுப்பறையில் காற்றோட்டம் இருக்குமாறு ஜன்னல், கதவுகளைத் திறந்துவையுங்கள்.
மாணவர்களின் உடல் வெப்பத்தைத் தினமும் பரிசோதியுங்கள்.
பள்ளி வளாகத்தையும் வகுப்பறையையும் சுத்தமாகப் பராமரியுங்கள், கிருமிநாசினி தெளியுங்கள்.
மாணவர்கள் தனிப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவியுங்கள்.
பள்ளி வாகனம் என்றால், தகுந்த இடைவெளியுடன் அமர வையுங்கள்.