அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு - மாணவர்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார் - Asiriyar.Net

Wednesday, October 27, 2021

அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு - மாணவர்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார்

 




மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். குறைகளை கேட்டறிந்த முதல்வர் மாணவர்களுக்கான மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்.


கிழக்கு கடற்கரைச் சாலையில் மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இன்று மதியம் தமிழக முதல்வர் திடீரென ஆய்வு நடத்தினார்.


அப்போது மாணவர்களிடம் உரையாடிய முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். பின், மாணவர்களுக்கு சமைத்த மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்.


Post Top Ad