50 சதவீத தமிழ் வழி வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Asiriyar.Net

Friday, October 22, 2021

50 சதவீத தமிழ் வழி வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

 

தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 50 சதவீதம் தமிழ் வழி வகுப்புகள் கட்டாயம்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து தொடக்க கல்வி இயக்குநரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


இனி வரும் காலங்களில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கேட்கும் பள்ளிகள், அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளனவா என பரிசீலித்த பின்னரே, அனுமதி அளிக்க வேண்டும்.


மேலும், ஆங்கில வழி பிரிவு துவங்க, அனுமதி கேட்கும் பள்ளிகளில் குறைந்தபட்சம், 50 சதவீதம் பிரிவுகள், தமிழ் வழியாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்கும் பள்ளிகளுக்கே அனுமதி வழங்க வேண்டும்.ஒரு பள்ளியில் நான்கு பிரிவுகள் இருந்தால், இரண்டு பிரிவுகள் தமிழ் வழியாகவும், இரண்டு பிரிவுகள் ஆங்கில வழியாகவும் செயல்படலாம்.


மூன்று பிரிவுகள் இருந்தால், இரண்டு தமிழ் வழி பிரிவு இருக்க வேண்டும். ஒரு பிரிவு மட்டும் இருந்தால், அது தமிழ் வழியாகவே செயல்பட வேண்டும். இந்த அறிவுரைப்படி, அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







No comments:

Post a Comment

Post Top Ad