தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்,
சென்னை -6 ந. க. எண். 34462 / பிடி1/ இ1/ 2020, நாள். 07 .09.2021
பொரு பள்ளிக் கல்வி - 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ள் : பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவது - மாணவ
/மாணவியர் நலன் சார்ந்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்ந்து.
பார்வை
அரசுக் கடித எண். 28024/D.M.I.V(2)/2021-1, நாள்.26.08.2021.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து 01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பார்வையில் கண்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு பள்ளிகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன.
மாணவ மாணவியரின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை ஆசிரியர்கள் கீழ்காணும் இனங்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1. மாணவ/மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நுழையும் போதே உடல் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும். உடல் வெப்பநிலை அதிகம் இருப்பின் அவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்காமல் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்திட வேண்டும்.
2. அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்.
3. மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது கிருமிநாசினி/சோப் கொண்டு கைகளை சுத்தம் செய்வதை உறுதி செய்தல் வேண்டும்.
Click Here To Download - New Instructions to HM's Commissioner Proceedings - Pdf