கணினி பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு மாற்று தேதியில் நடத்திட வேண்டி மாநில திட்ட இயக்குநருக்கு கோரிக்கை! - Asiriyar.Net

Tuesday, September 7, 2021

கணினி பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு மாற்று தேதியில் நடத்திட வேண்டி மாநில திட்ட இயக்குநருக்கு கோரிக்கை!

 


கணினி பயிற்சிகளை மாற்று தேதியில் நடத்திட வேண்டி மாநில திட்ட இயக்குநர் (SPD) அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..


வணக்கம் . 06,09.2021 முதல் 11.09.2021 வரை உள்ள 5 நாட்களுக்கு தொடக்க , நடுறிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ICT பயற்சி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 10.09.2021 ) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ள நிலையில் , சனிக்கிழமை பயிற்சி உள்ளதால் உடன் திரும்ப வேண்டிய நிலையின் காரணமாக குடும்பத்தோடு கொண்டாட முடியாத சூழல் உள்ளது.


மேலும் இவ்வாரத்தில் சுப நிகழ்வு தினங்களாக இருப்பதாலும் 08,09,11 ஆகிய தேதிகளை தவிர்த்து அடுத்த வாரத்தில் நடத்திட ஆவன செய்யும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.




Post Top Ad