மேலும் ஒரு அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி! - Asiriyar.Net

Saturday, March 20, 2021

மேலும் ஒரு அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி!

 






திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியான ஆசிரியரின் மனைவி தஞ்சை டிஇஎல்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். பணிக்காக தஞ்சைக்கு சென்று வரும் போது மனைவிக்கு கொரோனா உறுதியான நிலையில் கணவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 



தஞ்சை மேக்ஸ்வெல் பள்ளியில் புதியதாக 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட பள்ளிகளில் மேலும் 29 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை பிருந்தாவனம் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment

Post Top Ad