'பிளஸ் 2 பொதுத் தேர்வையொட்டி சட்டசபை தேர்தல் பணிகளில் இருந்து மதுரையில் முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. கலெக்டர் அன்பழகனிடம் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு உள்ளதால் அவர்கள் நலன் கருதி பாடத்திட்டங்களை முடிக்கும் வகையில் கூடுதல் வகுப்புகளை முதுநிலை ஆசிரியர் மேற்கொள்கின்றனர்.
வழக்கமாக சட்டசபை தேர்தலின் போது வாக்குச்சாவடி அலுவலர் பணி ஒதுக்கப்படும். பொதுத் தேர்வை முன்னிட்டு இந்தாண்டு தேர்தல் பணியில் முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கோவிட் 19 பரவல் காலமாக உள்ளதால் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் தபால் ஓட்டுகள் முழுமையாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள், பிரச்னைகளை தெரிவித்து அவற்றை களைய 'ஹெல்ப் டெஸ்க்' அமைத்து தர வேண்டும். தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு இருப்பிடத்திற்கு அருகாமையில் ஆசிரியருக்கு தேர்தல் பணி ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்வாகிகள் பிரேம்குமார், கார்த்திகேயன், சரவணக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment