04.03.2021 அன்று மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Asiriyar.Net

Tuesday, March 2, 2021

04.03.2021 அன்று மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

 





அரசு விடுமுறை என்றால் தான் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முருகனின் தைப்பூச விழாவிற்கு முதன் முறையாக பொது விடுமுறை அளிக்கப்பட்டு அளிக்கப்பட்டது.



இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் வருடந்தோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் வருகிற மார்ச் 4ஆம் தேதி அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.



இதனால் இந்த விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சமதர்மம், அறம் உள்ளிட்ட போதனைகளை மக்களுக்கு போதித்த மனிதராக பிறந்து கடவுளாக மனிதர்களால் வணங்கப்பட்டு வரும் அய்யா வைகுண்டரின் பிறந்தநாள் தென்தமிழகத்தில் விமர்சையாக வருடந்தோறும் கொண்டாடி வணங்கி வருவது வழக்கமாக இருக்கிறது.

Post Top Ad