தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் - சுகாதாரத்துறை அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, January 13, 2021

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் - சுகாதாரத்துறை அறிவிப்பு

 






தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் தற்போது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புனேவில் இருந்து விமானத்தில் 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சென்னை வந்தன. சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஜன.16 முதல் முன்களப்பணியாளர்களுக்கு போடப்படுகிறது. தமிழகம் வந்த கொரோனா தடுப்பூசிகள் மொத்த எண்ணிக்கை 5,36,500-ஆக உள்ளது.



தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் குறித்த விவரம்:



* சென்னை (63,700) , காஞ்சிபுரம்(10,900), செங்கல்பட்டு(23,800) மற்றும் திருவள்ளூர் (19,600) மாவட்டங்களுக்கு 1,18,000 தடுப்பூசிகள் வழங்கப்படும் 



* கடலூர் (7,800), விழுப்புரம்(11,500), கள்ளக்குறிச்சி(6,200) மாவட்டங்களுக்கு 25,500 தடுப்பூசிகள் வழங்கப்படும் 



* திருச்சி(17,100), அரியலூர்(3,300), பெரம்பலூர்(5,100), புதுக்கோட்டை (6,900),கரூர்(7,800) ஆகிய மாவட்டங்களுக்கு 40,200 தடுப்பூசிகள் வழங்கப்படும் 



* தஞ்சாவூர் (15,500), நாகப்பட்டினம்(6,400), திருவாரூர்(6,700) மாவட்டங்களுக்கு 28,600 தடுப்பூசிகள் வழங்கப்படும் 



* மதுரை(23,100), திண்டுக்கல் (13,100), விருதுநகர்(9,700), தேனி (8,200) மாவட்டங்களுக்கு 54,100  தடுப்பூசிகள் வழங்கப்படும் 


* சிவகங்கை(10,700), ராமநாதபுரம்(8,300) மாவட்டங்களுக்கு 19,000தடுப்பூசிகள் வழங்கப்படும் 




* நெல்லை (10,900), கன்னியாகுமரி(22,600), தென்காசி(5,100), தூத்துக்குடி(13,100) மாவட்டங்களுக்கு 51,700 தடுப்பூசிகள் வழங்கப்படும் 



* வேலூர் (18,600), ராணிப்பேட்டை (4,400),திருப்பத்தூர் (4,700) மற்றும் திருவண்ணாமலை(14,400) மாவட்டங்களுக்கு 42,100 தடுப்பூசிகள் வழங்கப்படும் 



* சேலம் (27,800), கிருஷ்ணகிரி(11,500), நாமக்கல்(8,700), தர்மபுரி (11,800) மாவட்டங்களுக்கு 59,800 தடுப்பூசிகள் வழங்கப்படும் 



* கோவை (40,600), ஈரோடு (13,800), திருப்பூர் (13,500), நீலகிரி (5,300) மாவட்டங்களுக்கு 73,200 தடுப்பூசிகள் வழங்கப்படும் !

No comments:

Post a Comment

Post Top Ad