மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் முதலில் தங்கள் பணியை முறையாக செய்ய வேண்டும்
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் & அரசு ஊழியர்கள் & அமைப்பு தலைவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்களாக கருதப்பட வேண்டும்
முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும்
முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட வேண்டும், புகார் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் சொத்துக்களையும் சேர்த்து மொத்த சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும், அப்போது தான் இது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜா மற்றும் அவருக்கு பட்டா வழங்கிய வட்டாட்சியர் ஆகியோரின் சொத்து விபரங்கள், வங்கிக்கணக்கு விபரங்கள், அவர்களது குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றனர்? என்பது தொடர்பான விபரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் ராஜா மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அதன் நகலையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஏன் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதில்லை? அவ்வாறு சேர்த்தால்தான் அரசுப்பள்ளிகளின் தரம் உயரும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு மோசமான உதாரணம் என கண்டனம் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment