வரும் 20 21ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது இதன்பொருட்டு தேர்தலில் பணிபுரிய அரசு ஊழியர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பெற அனைத்து துறை தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் எந்த ஒரு அரசு ஊழியரின் பெயரையும் விடுபடாமல் கவனமாக பட்டியல் தயார் செய்ய உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் எந்த ஊழியரின் பெயர் விடுபடவில்லை என உறுதி மொழி சான்றளிக்க தனி படிவம் தேர்தல் ஆணையத்தால் சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கும் அலுவலக தலைவர்களுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது இதனை சார்ந்த அலுவலர்கள் பூர்த்திசெய்து ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
No comments:
Post a Comment