ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - ஐந்து ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 30, 2023

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - ஐந்து ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

 அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அனைவருக்கும் வணக்கம்.

 ஆசிரியர் பொது மாறுதலில்  பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள்  விண்ணப்பங்களை எமிஸ் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து கொண்டிருக்கிறார்கள்.


 அவர்களில் ஒரே இடத்தில் ஐந்து ஆண்டுகள் அதற்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதலில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்முன்னுரிமையானது spouse முன்னுரிமைக்கு முன் வைக்கப்படும் என்பதும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


 எனவே அனைத்து ஆசிரியர்களும்  இந்த முன்னுரிமையினை  தகுதியுடையவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 எவரேனும் இவ்வாய்ப்பினைத் தவற விட்டிருந்தால் Beo  தொடர்பு கொண்டு ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பத்தினை நிராகரிக்கச் செய்து  புதியதாக விண்ணப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


 ஒரு ஆசிரியர் உறை இடத்தில் ஐந்தாண்டுகள் அதற்கு மேல் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று தலைமை ஆசிரியரால் வழங்கப்பட வேண்டும். தலைமையாசிரியர் ஒரே இடத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர் மூலமாக வழங்கப்பட வேண்டும் அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


Post Top Ad