எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் தொடக்க விழா - Commissioner Press Release - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 17, 2023

எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் தொடக்க விழா - Commissioner Press Release

 

எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் தொடக்க விழா - பள்ளிக்கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் இயங்க முடியாத சூழல் உருவானதால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நிரப்புவதற்காக இல்லம் தேடிக் கல்வி உட்பட பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு . 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் 16 லட்சம் குழந்தைகளின் கற்றலை வலுப்படுத்த உருவான திட்டம் ' எண்ணும் எழுத்தும் ' . இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி ' எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தின் ' தொடக்க விழா மார்ச் 17 , 2023 அன்று மாலை 3 மணிக்கு ஆம்பூர் பெத்லஹேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நிகழவிருக்கிறது.


மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார் . எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் நிகழ்வுக்குப் பின்னர் , எண்ணும் எழுத்தும் கொண்ட்டாட்டப் பதாகையில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறும் . நிகழ்வில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டப் பரப்புரை வாகனத்தை கொடியசைத்து மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைப்பார்.


 நிகழ்வுக்கு தங்கள் நிறுவனத்தில் இருந்து செய்தியாளர்களை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம் .




Post Top Ad