TNSED APP ல் Leave entry பதிவு செய்யும் முறைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, February 18, 2023

TNSED APP ல் Leave entry பதிவு செய்யும் முறைகள்

 




EMIS ல் Leave entry  பதிவு செய்யும் முறைகள்..


Yearly leaves

1) Casual leave 


12 நாட்களில் நாளது வரை நீங்கள் எடுத்தது போக மீதமுள்ள விடுப்புகளின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..


2) Restricted holidays


3 நாட்களில் நாளது வரை நீங்கள் எடுத்தது போக மீதமுள்ள விடுப்புகளின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..


3) compensatory leave.


இதில் 0 எனப் பதிவிட வேண்டும்..


ஆண் ஆசிரியர்களுக்கு..


Service leaves


1) Earned leave


பணிப்பதிவேட்டில் Calculation பக்கத்தில் மீதமுள்ள ஈட்டிய விடுப்பு நாட்களின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்


2) Unearn leave on medical certificate


அவரவர் பணிக்காலத்திற்கு ஏற்ற மருத்துவ விடுப்பு நாட்கள் எத்தனை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  அத்தனை மருத்துவ விடுப்பு நாட்களில் நீங்கள் எடுத்த மருத்துவ போக, மீதமுள்ள மருத்துவ விடுப்பு நாட்களின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..


3) EOL on loss of pay without medical certificate

மருத்துவச் சான்று அல்லாமல் எடுக்க அனுமதிக்கப்படும் ஊதியமில்லா விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 360. இதில் நீங்கள் எடுத்த விடுப்பைப் கழித்து மீதம் உள்ள விடுப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால்,  360 எனக் குறிப்பிட வேண்டும்


4) EOL On loss of pay with medical certificate

மருத்துவச் சான்றின் பேரில் எடுக்கும் ஊதியமில்லா விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 180. இதில் நீங்கள் எடுத்த விடுப்புகளின் எண்ணிக்கையைக் கழித்து மீதமுள்ள நாட்களைக் குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால், 180 எனக் குறிப்பிட வேண்டும்..


5)  Unearn leave on private affairs

இதில் அனுமதிக்கப்படும் அரைச்சம்பள விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 180. இந்த எண்ணிக்கையில் நீங்கள் எடுத்த அரைச்சம்பள விடுப்பு நாட்களின் கழித்து மீதமுள்ள எண்ணிக்கையை பதிவிட வேண்டும்..


6) Special casual leave

இதில் 10 எனக்  குறிப்பிட வேண்டும்..


7) Special disability leave

இதில் 0 எனக் குறிப்பிட வேண்டும்


பெண் ஆசிரியர்களுக்கு..

வரிசை எண் 1,2  இருபாலருக்கும் பொது..

3) Maternity leave

👉🏽ஒரு குழந்தை இருப்பவராக இருந்தால், மீதமுள்ள நாட்கள் 365 எனப் பதிவிட வேண்டும்.


👉🏽 இரு குழந்தைகள் இருந்தால், மீதமுள்ள நாட்கள் 0 என பதிவிட வேண்டும்.


👉🏽 குழந்தை இல்லை எனில் மீதமுள்ள நாட்கள் 730 எனப் பதிவிட வேண்டும்..


4) Leave for adoption of child

 270 என பதிவிட வேண்டும்..


5) abortion leave..

42 நாட்கள் உண்டு. விடுப்பு எடுத்த நாட்களை கழித்துக் கொண்டு பதிவிட வேண்டும். இல்லையெனில் முழுமையாக 42 என பதிவிடலாம்..


6)  Leave on still born child birth..

தற்போது குழந்தை பிறந்து மகப்பேறு விடுப்பில் இருந்தால் 365  நாட்களில் மகப்பேறு விடுப்பு துய்த்துள்ள நாட்களை கழித்துக் கொண்டு மீதுள்ள நாட்களைப் பதிவிட வேண்டும்.  இல்லை எனில்  0 எனப் பதிவிட வேண்டும்..


வரிசை எண் 7,8,9,10,11 அனைவருக்கும் பொது..


இறுதியாக,


 Submit செய்ய வேண்டும்.

 ஒரு முறை submit செய்து விட்டால் மாற்ற இயலாது..


 தலைமை ஆசிரியர்  log in ல் Edit செய்து கொள்ளலாம். தலைமை ஆசிரியர் edit செய்த பிறகு அல்லது சரியாக இருக்கும் பட்சத்தில் approve செய்ய வேண்டும் ..


ஆசிரியர்கள் தங்கள் உயர் அலுவலர்களை, சக ஆசிரியர்களை கலந்து ஆலோசிக்கவும்



Post Top Ad