அரையாண்டு தேர்வு இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 13, 2021

அரையாண்டு தேர்வு இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

 


10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.


நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போனது. ஏற்னெவே 10ம் வகுப்பும் மற்றும் 11,12ம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதனையடுத் தற்போது திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


மேலும், 10,11,12ம் வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்துவதற்கான வாய்ப்பில்லை. டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.







Post Top Ad