மாணவர்கள் ஒரு மணி நேரத்தில் வீடுகளுக்கு செல்லலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Asiriyar.Net

Wednesday, October 13, 2021

மாணவர்கள் ஒரு மணி நேரத்தில் வீடுகளுக்கு செல்லலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 




நவம்பர் 1-ம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் & பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டமிட்டபடி நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.


5-ம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்து வகுப்புகளில் தொடர்ச்சியாக வகுப்புகளில் அமர்வது என்பது கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும். எனவே பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அதேபோல 10 & 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad