EMIS & PFMS - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய அறிவுரைகள் - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 25, 2021

EMIS & PFMS - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய அறிவுரைகள் - CEO Proceedings

 



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கிருஷ்ணகிரி

  • அனைத்து பள்ளிகளிலும் தினமும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை விவரத்தினை EMIS portal ல் தவறாமல் காலை 10.00 மணிக்குள் பதிவு செய்தல் வேண்டும். 


  • EMIS Portal ல் அனைத்து மாணவர்களின் ஆதார் விவரத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். - 

  • EMIS Portal ல் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கல்விதகுதியின் சரியான விவரத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • மாற்றுச்சான்றிதழ்(TC) வழங்கப்பட வேண்டிய மாணவர்களுக்கு EMIS Portal ல் விவரத்தினை பதிவேற்றம் செய்து உடனடியாக மாற்றுச்சான்றிதழ்(TC) வழங்க வேண்டும். 

  • அனைத்து பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களையும் ஆசிரியப் பயிறுநர்கள் சார்ந்த பள்ளிக்குட்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் பள்ளியில் சேர்த்து கல்வியைத் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

  • ஒவ்வொரு குறுவளமைய பொறுப்பு தலைமையாசிரியர்களும் தங்கள் குறுவளமையத்திற்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கவும் EMIS Portal ல் Common Pool ல் உள்ள மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அதன் விவரத்தினை EMIS Portal ல் பதிவேற்றம் செய்யவும் குறுவளமைய ஆசிரியப் பயிற்றுநறுடன் இணைந்து செயல்பட்டு பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் Common Pool ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

  • ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் வழங்கப்படும் அனைத்து மான்யத் தொகைகளும் மாநில திட்ட இயக்குநர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி PFMS இணையம் வாயிலாக மட்டுமே செலவினம் மேற்கொள்ளப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் காசோலை வழங்குதல் கூடாது. 

  • அனைத்து செலவினத்திற்கான இரசீகளும் GST Bill ஆக இருத்தல் வேண்டும். 

  • PFMS இணையம் மூலம் செலவினம் மேற்கொண்ட விவரத்தினை தினமும் EMIS Portal ல் பதிவேற்றம் செய்யவேண்டும். செலவினம் மேற்கொள்ளப்படவில்லை எனில் Nil என பதிவேற்றம் செய்யவேண்டும்.


முதன்மைக்கல்வி அலுவலர், மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,





Post Top Ad