பள்ளிதிறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.! மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 17, 2021

பள்ளிதிறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.! மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

 

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த 14-ம் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் சிலர் முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் எனவும் சிலர் 1 முதல் 8 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கலாம் என கருத்து தெரிவித்தனர். இந்த கருத்துக்களை அனைத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கையாக தலைமைச்செயலகத்தில் இன்று முதல்வரிடம் தாக்கல் செய்தார்.இந்நிலையில்,பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பேசியதாவது: பள்ளிகள் திறப்பது குறித்து என்ன முடிவெடுத்துள்ளீர்கள் என முதல்வர் கேட்டபோது, ஒவ்வொரு சிஇஓவுக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது.அது தொடர்பான அறிக்கையை தங்களிடம் சமர்ப்பித்துள்ளோம். நீங்கள் என்ன முடிவு சொல்கிறீர்களோ? அதற்கேற்ப நாங்கள் எங்களை தயார்படுத்தி கொள்வோம் என்று கூறினோம். உடனே, முதல்வர் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களிடம் கருத்துக்களை கேட்டபிறகு முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.


இதற்கிடையில் குழந்தைகள் பள்ளிக்கு வருவதுதான் சரியாக இருக்கும் என்று WHO சீனியர் சயிண்டிஸ்ட் சௌமியா சாமிநாதன் கூறியுள்ளார்.மேலும்,தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குழந்தைகளை  பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுதியதாக கூறப்பட்ட நிலையில்,அவ்வாறு செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.இது குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். எனவே,அனைத்துப் பள்ளிகளும் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்ப உள்ளது.


ஊரடங்கு குறித்து எப்படி வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொல்வாரோ அதேப்போன்று, பள்ளிகள் திறப்பது குறித்தும் முதல்வர் ஆலோசித்து என்ன கூறுகிறாரோ? அதற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை முடிவும் இருக்கும் என்று கூற கடமைப்பட்டுள்ளேன். மேலும், கொரோனா தொற்றைக் காட்டிலும்,பெரிய தொற்றாக இருக்க கூடியது மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல்,வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் கற்றல் இழப்பு என்று WHO தெரிவித்துள்ளது. இதனால், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான் முடிவெடுப்பார். எனினும், 148 மாணவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளுக்கு வர வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. “,என்று கூறியுள்ளார்.

Post Top Ad