போலி ஆணை - 2 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் "டிஸ்மிஸ்" - CEO உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 29, 2021

போலி ஆணை - 2 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் "டிஸ்மிஸ்" - CEO உத்தரவு

 
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சவுந்தர்ராஜன், வசந்தகுமார். இருவரும், கடந்த 2015ல் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக தஞ்சையில் பணியில் சேர்ந்தனர். தற்போது சவுந்தராஜன் தஞ்சை அருகே வாண்டையார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், வசந்தகுமார் பனையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர். 


இந்நிலையில் இருவரின் பணிநியமன ஆணைகள் குறித்து சந்தேகத்தில் சில மாதங்களுக்கு முன் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விசாரணை மேற்கொண்டார். இதில், இருவரும் போலி நியமன ஆணைகளை வழங்கி சேர்ந்தது உறுதியானது. இதையடுத்து இருவரையும் டிஸ்மிஸ் செய்து அவர் நேற்று உத்தரவிட்டார்.Post Top Ad