ஏப்‌. 6ம்‌ தேதி ஓட்டுப்பதிவு நாளில்‌, கடைசி 1 மணி நேரம் - மாற்று ஏற்பாடு செய்ய ஆசிரியர்கள் வேண்டுகோள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 29, 2021

ஏப்‌. 6ம்‌ தேதி ஓட்டுப்பதிவு நாளில்‌, கடைசி 1 மணி நேரம் - மாற்று ஏற்பாடு செய்ய ஆசிரியர்கள் வேண்டுகோள்

 



கடைசி ஒரு மணி நேரம்‌ நடக்காதா? ஊரடங்கு வருமா? ஐ வராதா? என்பதுதான்‌ இப்போதைய விவாதப்‌ பொருளாக உள்ளது. திட்டமிட்டப்படி தேர்தல்‌ நடக்கும்‌ என்று தமிழக தலைமை தேர்தல்‌ அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்க, அதற்கான பணிகள்‌ முடுக்கப்பட்டுள்ளது. 



ஏப்‌. 6ம்‌ தேதி ஓட்டுப்பதிவு நாளில்‌, கடைசி 1 மணி நேரத்தில்‌ அதாவது மாலை 6 முதல்‌ 7 மணிக்குள்‌, கரோனா நோயாளிகளும்‌ தேர்தல்‌ கமிஷனால்‌ வழங்கப்படும்‌ பாதுகாப்பு கவச உடையும்‌, கையுறையும்‌ அணிந்து வந்து ஓட்டளிக்கலாம்‌ என அறிவிக்கப்பட்டூள்ளது. வடா. ர எம்‌ எண்னதல்‌ தேர்தல்‌ கமிஷன்‌ இப்படி அறிவித்திருந்தாலும்‌ ஓட்டுச்‌ சாவடிகளில்‌ தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ அதிகாரிகளின்‌ வயிற்றில்‌, இந்த அறிவிப்பு புளியைக்‌ கரைத்து, பீதியில்‌: ஆழ்த்தியுள்ளது. 



நம்‌ ஓட்டுச்சாவடிக்கு கரோனா தொற்றாளர்கள்‌ யாரும்‌ ஓட்டுப்போட வந்துவிடக்கூடாது' என்று இப்போதிருந்தே அவர்கள்‌ வேண்டாத தெய்வம்‌ இல்லை.  கவச உடை, கையுறை அணிந்து வந்து ஓட்டு மிஷினை பயன்படுத்தினாலும்‌, அதன்பின்‌, அதிகாரிகள்‌ ஓட்டு மிஷின்களை மூடி சீல்‌ வைக்கும்‌ பணிக்காக அதை முழுமையாக கையாள வேண்டியுள்ளது. 



அதேபோல்‌ ஓட்டூச்சாவடிக்குள்‌ வரும்‌ கரோனா பாதிப்புள்ளவர்கள்‌ அங்கு கை வைக்கவோ, தும்மவோ, இருமவோ வாய்ப்புள்ளது. இதனால்லட்டுச்சாவ்டி அதிகாரிகள்‌, பூத்‌ ஏனென்ட்டுகளுக்கும்‌ நோய்‌ தொற்று பரவலாம்‌. எனவே, கரோனா. பாதிப்புக்குள்ளானவர்களை ஓட்டுச்சாவடிகளுக்கு வரவழைப்பதற்கு பதில்‌, அவர்களுக்கு தபால்‌ ஓட்டு வாய்ப்பு வழங்கலாம்‌. ஏற்கனவே, முதியவர்கள்‌, மாற்றுத்திறனாளிகளுக்கு இம்முறை வழங்கப்பட்டுள்ளதால்‌, கரோனா தொற்றாளர்களுக்கும்‌ வழங்குவதில்‌ எந்த பாதிப்பும்‌ இருக்கப்போவதில்லை. 



ஆனால்‌, இதையும்‌ மீறி கரோனா நோயாளிகளை ஓட்டுச்‌ சாவடிகளுக்குள்‌ அனுமதித்து அதனால்‌ தேர்தல்‌ பணியில்‌ “ ஈடுபடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால்‌ அதற்கான முழுபொறுப்பையும்‌ அரசே ஏற்கவேண்டும்‌. இவ்வாறு அவர்‌ கூறினார்‌. .. 








Post Top Ad