ஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி ? உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் ? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 18, 2021

ஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி ? உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் ?

 





ஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி ? உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் ? (uidai.gov.in)


AADHAAR NEW UPDATE : உங்களின் செல்போனில் நீங்களே பிறந்த தேதி, பெயர், முகவரி மாற்றம் செய்யும் முறை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயனடையுங்கள்...மற்றவர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்..


இ சேவை மையம் செல்லாமல் உங்கள் ஆதாரில் வீட்டிலிருந்தே உங்கள் mobile/ laptop மூலம்


http://ssup.uidai.gov.in/ssup/login.html


என்ற இணைய தளத்தை பயன்படுத்தி பெயர், பிறந்த தேதி , முகவரி மாற்றம் செய்யலாம்.



புதிதாக update செய்யும் போது பதிவு செய்யும் விவரங்களும் upload document யில் உள்ள விவரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.


பெயர் ,பிறந்த தேதி ,முகவரி மாற்ற ₹ 50 online மூலம் செலுத்த வேண்டும்.



கட்டணம் செலுத்திய உடன் speed post மூலம் புதிய ஆதார் அடையாள அட்டை உங்கள் வீடு தேடி வரும்.




COLOUR AADHAAR PVC CARD- விண்ணப்பிக்கும் முறை :



https://uidai.gov.in என்ற இணைய தளத்தில் my Aadhaar இல் order Aadhaar PVC card click செய்து உங்கள் 12 இலக்க ஆதார் எண் ,captcha,OTP யை type செய்து ₹ 50 online யில் செலுத்தி speed post மூலம் பெற்றுக்கொள்ளலாம்.



உங்களின் ஆதாரில் ஏதேனும் தவறுகள் அல்லது எழுத்துப் பிழைகள் இருப்பின் அவற்றை எளிதில் சரி செய்துகொள்ள முடியும்.ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை இ-சேவை மையங்களிலும், தபால் நிலையங்களிலும் மாற்றம் செய்யலாம்.அதே போல் தற்போது நீங்களும் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் ஆகியவற்றை ஆன்லைனில் சரி செய்து கொள்ளலாம்.


வாங்க உங்களின் ஆதார் விவரங்களை உங்களின் செல்போனில் நீங்களே எவ்வாறு திருத்துவது என்று பார்ப்போம் :


மிக முக்கியமாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால் மட்டுமே நீங்கள் ஆன்லைனில் உங்கள் விவரங்களை மாற்ற முடியும்



நீங்கள் எந்த செல்போன் எண்ணை பதிவு செய்திருக்கீற்களோ அந்த செல்போனில் ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை வைத்து ஆதாரை மாற்றமுடியும்



1. உங்களின் ஆதார் கார்டில் உள்ள முகவரி மாற்றம் செய்ய கீழே உள்ள ஆவணங்களில் ஒன்று கட்டாயம், எனவே இவற்றில் ஒன்றை கட்டயம் கையில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் :


வங்கி பாஸ்புக்,


தொலைபேசி கட்டணம் பில் ,


கேஸ் பில்,


பாஸ்போர்ட்,


ரேஷன் கார்டு,


வாக்காளர் அடையாள அட்டை,


டிரைவிங் லைசென்ஸ்




மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் உங்களிடம் இல்லை எனில் நீங்கள் உங்கள் பகுதி VAO அல்லது குரூப்-ஏ நிலையில் உள்ள அரசு அதிகாரிகளிம் ஒப்பம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை நீங்கள் சமர்ப்பித்தாக வேண்டும்.




இதற்கு நீங்கள் முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற இணையதளத்தை உங்களின் செல்போனில் ஓபன் செய்து கொள்ளுங்கள் .. பின்பு இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவும்.





பிறகு கீழ் கொடுக்கப்பட்டுள்ள கேப்சாவை சரியாக உள்ளீடு செய்து 'SUBMIT' என்ற OPTIONஐ கிளிக் செய்தால் தங்களின் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.. அந்த OTP யை உள்ளீடு செய்யவும், உள்ளீடு செய்த பின்பு உங்களின் ஆதரை திருத்தும் செய்வதற்க்கான OPTIONS வரும்




முகவரியை மாற்றம் செய்வதற்கான OPTION-ஐ CLICK செய்யுங்கள். அதில் உங்களின் சரியான முகவரியை Update செய்த பிறகு, தேவையான சான்றிதழை Upload செய்ய வேண்டும். அதன் பிறகு பணம் செலுத்தும் வசதியை Click செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும், நீங்கள் ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி விடுவார்கள்.. இந்த ஆதார் கார்டானது உங்களுக்கு குறைந்தது பத்து முதல் பதினைந்து நாட்களுக்குள் வந்து சேரும்.




நீங்கள் SUBMIT செய்து முடித்த உடன் உங்களுக்கான URN NUMBER திரையில் தோன்றும்..





அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்




நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா, இல்லையா என்று தெரிந்து கொள்ள


https://resident.uidai.gov.in/check-aadhaar


Post Top Ad