4 மாவட்டங்களுக்கு நாளை (04.03.202) உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்கள் உத்தரவு. - Asiriyar.Net

Tuesday, March 3, 2026

4 மாவட்டங்களுக்கு நாளை (04.03.202) உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்கள் உத்தரவு.

 




திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில், அய்யா வைகுண்டசாமியின் 194-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 04.03.2026 (புதன்கிழமை) அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் வெளியிட்டுள்ளார். அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிப்பு மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவிப்பு.


இவ்விடுமுறைக்கு ஈடாக, 14.03.2026 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம்

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் 04.03.2026 மற்றும் 10.03.2026 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாமித்தோப்பு பகுதியில் நடைபெறும் அய்யா வைகுண்டசாமியின் 194வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 4 அன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம், அய்யா வைகுண்டசுவாமி 194வது பிறந்தநாள் விழா மாசி மாதம் 20-ம் தேதி (4.3.2026) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு 4.3.2026, புதன்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.


தென்காசி மாவட்டம்

அய்யா வைகுண்டசாமியின் 194-ஆவது அவதாரத் திருவிழாயொட்டி தென்காசியில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிப்பு 


தென்காசியில் மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad