ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பகுதி நேர பயிற்றுநர்கள் தகவலின்றி பணிக்கு வராமை நடவடிக்கை மேற்கொள்ளுதல்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணிபுரியும் 11,773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு 01.01.2026 முதல் தொகுப்பூதியத்தினை ரூ.12,500/- லிருந்து ரூ.15,000/- என 11 மாதத்திற்கு (மே மாதம் நீங்கலாக) ரூ.2.500/- உயர்த்தி வழங்கியும் மற்றும் மே மாதத்திற்கு மட்டும் ரூ.10.000/- சிறப்பு உதவித்தொகை வழங்கியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணியாற்றும் பகுதிநேரப் பயிற்றுநர்கள் ஒரு சிலர் தகவலின்றி பணிக்கு வராமல் இருப்பது தலைமையின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. பார்வை (1)ல் காணும் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் மீது அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணியாற்றும் பகுதி நேர பயிற்றுநர்கள் தொடர்ந்து தகவலின்றி பணிக்கு வராமல் இருந்தால் பணியிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 17.06.2015 நாளிட்ட மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பகுதிநேரப் பயிற்றுநர்கள் தகவலின்றி பணிக்கு வராமல் இருந்தால் அவர்களை மீளப் பணியில் சேர அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment