தேர்தல் அவசரம்
🌷மதிப்பிற்குரிய மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சட்டமன்றத் தேர்தல் 2026 தேர்தல் பணி ஆற்றவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன
🌷அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளதால் ஏற்கனவே தங்கள் வாக்கு இடம் பெற்று இருந்த பகுதி எண் (Part No) பகுதி வரிசை எண் (part serial No) மாறி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் தற்போதைய நிலவரப்படி தங்களுடைய வாக்கு (Vote ) இடம் பெற்றுள்ள சட்டமன்ற தொகுதி எண் , பகுதி எண் (Part No) , பகுதி வரிசை எண் ( part serial No) ஆகியவற்றை தெளிவாக தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
இவ்விவரத்தை ecinet என்ற இணைய முகவரியில் Voter's service portal வலைதளத்தில் தங்களுடைய EPIC NUMBER பதிவிட்டு தங்களுடைய மாநிலத்தை (STATE) தேர்வு செய்து captcha code ஐ பதிவிட்டு search ஆப்ஷனை கிளிக் செய்தால் அனைத்து விவரங்களும் தெரிந்து கொள்ள முடியும். அந்த விவரங்களை முதல் தேர்தல் பயிற்சிக்கு வரும் பொழுது தவறாமல் கொண்டு வர வேண்டும்.
🌷ஆசிரியர்களும் அலுவலகப் பணியாளர்கள் முதல் தேர்தல் பயிற்சிக்கு (FIRST TRAINING) வரும்பொழுது தங்களுடைய EPIC CARD ( VOTER ID) ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும். அத்துடன் தற்போதைய PASSPORT SIZE புகைப்படத்தினை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
🌷முதல் தேர்தல் பயிற்சி நாளிலேயே (FIRST TRAINING) தாங்கள் தபால் (POSTAL BALLOT ) முறையில் வாக்களிக்கும் பொருட்டு FORM 12 ஐ பெற்று அன்றைய தினமே பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அந்தந்த பயிற்சி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள FACILITATION CENTRES தவறாமல் ஒப்படைக்க வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. எனவே மேற்கண்ட தகவல்களை தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
👍👍👆👆👆🌹🌹
முதன்மை கல்வி அலுவலர்/ தபால் வாக்கு ஒருங்கிணைப்பு அலுவலர், மதுரை

No comments:
Post a Comment