G.O 18 - 3வது குழந்தை பிறப்புக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்து அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Thursday, March 19, 2026

G.O 18 - 3வது குழந்தை பிறப்புக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்து அரசாணை வெளியீடு




அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் பெண்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
 

தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், 3-வது பிரசவத்திற்கும் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பை வழங்கிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பெண் அரசு ஊழியர்களுக்கு 1980-ம் ஆண்டு முதல் 3 மாதங்கள் மட்டுமே இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை 2011-ம் ஆண்டு முதல் 6 மாதங்களாகவும், 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பை, 2016-ம் ஆண்டு ஜெயலலிதா 9 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டார். 

அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மு.க. ஸ்டாலின், 9 மாதங்களாக (270 நாட்கள்) இருந்த பேறுகால விடுப்பை கடந்த 2021-ம் ஆண்டு முதல் 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்தி அறிவித்தது.. கருச்சிதைவு அல்லது சட்டபூர்வமான கருக்கலைப்பு நிகழ்வுகளில், மருத்துவச் சான்றிதழுடன் 6 வாரங்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படலாம்.




No comments:

Post a Comment

Post Top Ad