சமூக அறிவியல் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை! - Asiriyar.Net

Saturday, March 14, 2026

சமூக அறிவியல் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை!

சமூக அறிவியல் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று  ராமநாதபுரம் மற்றும்  தூத்துக்குடி மாவாட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை


அரசு தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 16.03.2026 அன்று ஆங்கிலத் தேர்வு முடிந்தவுடன் 25.03.2026 அன்று புதன்கிழமை கணிதத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆங்கிலத் தேர்விற்கும். கணிதத் தேர்விற்கும் இடையே 8 நாட்கள் இடைவெளியுள்ளது.



எனவே சமூக அறிவியல் தேர்விற்கு மாணவர்களுக்கு தேர்வு சார்ந்து பயிற்சி வழங்குவதற்கு 3 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் ஆங்கிலத் தேர்வு முடிந்த மறுநாள் 17.03.2026 அன்று மட்டும் சமூக அறிவியல் தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கு சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்குமாறு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







No comments:

Post a Comment

Post Top Ad