தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மாணவர்களுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை மொத்தம் சுமார் 45 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது.
தமிழக பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தோ்வுகள் ஏப்ரல் 10 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி மையங்களாக பள்ளிகள் செயல்படவுள்ளன. இதையடுத்து 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 9-ஆம் வகுப்புக்கான விரிவான தோ்வுக் கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதன் விவரம்: 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வுகள் ஏப்ரல் 1 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதேபோல், 4, 5-ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தோ்வுகள் ஏப்ரல் 6-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரையும், 1, 2, 3-ஆம் வரை பயிலும் குழந்தைகளுக்கான இறுதி பருவத்தோ்வுகள் ஏப்ரல் 8-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரையும் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடவாரியாக தோ்வு நடைபெறும் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கால அட்டவணையைப் பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தோ்வுகளை நடத்தி முடிக்க வேண்டுமென அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறையை பொருத்தவரை 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் தொடங்கும். எனினும், ஆசிரியா்கள் பள்ளி இறுதி வேலைநாள் வரை பணிக்கு வரவேண்டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏப்ரல் 23-ல் சட்டமன்றத் தேர்தல்
இவ்வாண்டு விடுமுறை முன்னதாக அறிவிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களாக சட்டமன்றத் தேர்தலும், கோடைக்கால வெயில் தாக்கமும் கூறப்படுகின்றன. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைக்கப்படுவது வழக்கம்.

No comments:
Post a Comment