2025-2026ஆம் கல்வியாண்டிற்கான " தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நாளை ( 11.10.2025 ) முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மாநிலம் முழுவதிலும் 950 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது . மொத்தம் 2,70,508 மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவ / மாணவியர் இத்தேர்வினை எழுதுகின்றனர்.
இத்தேர்வில் முதன்மை மதிப்பெண்கள் பெறும் 1500 மாணவ / மாணவியர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளி கல்வி இயக்ககம் மூலமாக மாதந்தோறும் ரூ .1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் .
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களும் மிதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment