TET கட்டாயம் - உச்ச நீதிமன்றத்த் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் - Asiriyar.Net

Wednesday, October 1, 2025

TET கட்டாயம் - உச்ச நீதிமன்றத்த் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்

 



ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஆசிரியர் பணியமர்த்தல் மற்றும் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், அத்துடன் பதவி உயர்வு பெறுவதற்கும், கட்டாயமாக ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருநந்தது.


உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களுக்கு புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஆசிரியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, பணியில் உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதன்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 


கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ஏற்கனவே பல ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு முரணானது. அவர்கள் ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் தனி விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.


சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பே, தமிழக ஆசிரியர்களின் எதிர்கால பணி நிலை, அவர்களின் பதவி உயர்வு வாய்ப்பு, மேலும் மாணவர்களின் கல்வித் தரம் ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் 


ஆசிரியர்கள் சார்பில், புதிய பணியமர்த்தலுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், ஏற்கனவே பணியாற்றி வரும் அனுபவமுள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த சீராய்வு மனுவை தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad