1/10/25 முதல் surrender leave salary பெறலாம்...
எல்லோருக்கும் அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே...
இதற்கு முன் surrender date எதுவோ அதே தேதியில் தான் தற்போதும்...
April 2020 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு
அவர்களின் ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் surrender செய்யலாம்...
இவை தான் அரசாணை 35 இல் சொல்லப்பட்டவை..
இந்த அரசாணையை தவிர வேறு எந்த ஒரு தெளிவுரையும் இதுவரை வரவில்லை 🙏
இது சார்ந்த FAQ
*1) கடைசியாக 30 நாட்கள் (2019 க்கு முன்) surrender எனில் தற்போதும் 30 நாட்கள் surrender செய்யலாமா* ?
இல்லை, எல்லோருக்கும் தற்போது 15 நாட்கள் மட்டுமே மட்டுமே
*2) April 2020 க்கு முன் நியமனம்... ஆனால் இதுவரை சரண்டர் செய்யவில்லை எனில் தற்போது surrender செய்யலாமா?*
இது சார்ந்த குறிப்பு அரசாணையில் இல்லை..
ஆனால் April 2020 க்கு பிறகு நியமனம் பெற்று இதுவரை surrender செய்யாதவர்கள் அவர்களின் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் என இருப்பதால்
April 2020 முன் நியமனம் ஆனால் இதுவரை இல்லை இது தான் முதல் முறையாக எனில்
ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் என்று தான் பொருள் கொள்ளப்படுகிறது...
இதுவரை ஒரு முறை கூட சரண்டர் செய்யாதவர்கள் April 2020 முன் நியமனம் எனில் தற்போது 1/10 இல் விண்ணப்பிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது ( அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்த இரு வேறு கருத்துகள்)
3) *முந்தைய பணியிடத்தில் surrender செய்து உள்ளேன் தற்போது பதவி உயர்வு பெற்ற பதவியில் surrender செய்ய வில்லை..*
*பதவி உயர்வு பெற்ற பணியின் ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் சரண்டர் செய்யலாமா?*
இல்லை...
ஏற்கனவே எந்த பதவியில் இருந்து இருந்தாலும்... அதே Surrender date இல் தற்போதும் surrender செய்ய இயலும்..
4) *தற்போது due date இல் சரண்டர் செய்யாமல் அடுத்த ஆண்டு due date இல் 30 நாட்கள் சரண்டர் செய்யலாமா?*
தற்போதைய அரசாணையில் 30 நாட்கள் சரண்டர் என எந்த ஒரு குறிப்பும் இல்லை...
5) *SLS தொகைக்கு IT கணக்கீடு உண்டா?*
ஆமாம் பணியில் உள்ள போது பெறப்படும் SLS க்கு வருமான வரி கணக்கீடு உண்டு
பணி ஓய்வின் போது TSLS ( EL max 240 days) க்கு வருமான வரி விலக்கு உண்டு
6) *தற்போது std deduction 75000 கழித்த பிறகு எனது ஆண்டு வருமானம் 12,00,000 உள்ளே... வருமான வரி வராது...*
*சரண்டர் செய்தால் 12,01,000 என வருகிறது....* *ஆயிரம் ரூபாய் கூடுதலாக பெற்றதால் 60000+ tax கட்ட வேண்டுமா?*
*WhatsApp இல் சில நாட்களுக்கு முன் வந்த பதிவு SLS தொகையை விட tax தொகை அதிகமாக கட்ட வேண்டும்???*
இது வருமான வரி சார்ந்த சரியான புரிதல் இன்மை...
87A tax rebate, Marginal relief இந்த ஆண்டும் (2025-26) உள்ளது...
75k கழித்தது போக வருமானம் 12,01,000 எனில் கட்ட வேண்டிய வரி 1000+cess மட்டுமே..
7) *சரண்டர் செய்ய தகுதி காண் பருவம் முடித்து இருக்க வேண்டுமா?*
- இல்லை.
- SLS க்கும் சரண்டருக்கும் தொடர்பு இல்லை...
- ஓர் ஆண்டு பணியில் நிறைவு செய்தவர்கள்
- EL இருப்பில் 15 நாட்கள் உள்ளவர்கள் சரண்டர் செய்யலாம்
8) *தகுதி காண் பருவம் முடிக்காமல் surrender செய்தால் தகுதி காண் பருவம் தள்ளிப் போகுமா?*
- தகுதி காண் பருவம் தள்ளிப் போகாது...
- தகுதி காண் பருவத்தில் EL விடுப்பு எடுத்தால் மட்டுமே தள்ளிப் போகும்...
9) *தற்போது பணியாளர் surrender செய்ய என்ன செய்ய வேண்டும்?*
களஞ்சியம் ஆப் வழியாக விண்ணப்பிக்கவும்...
10) *களஞ்சியம் ஆப் எனது மொபைல் போனில் வேலை செய்ய வில்லை?*
- Android version check
- Software update
11) *களஞ்சியம் ஆப் மட்டும் தான் ஒரே வழியா?*
- இல்லை...
- Mobile/system/ laptop
- Web login வழியாக தங்களின் employee self service மூலம் surrender க்கு விண்ணப்பிக்கலாம்.
- Mobile app
- Web portal இரண்டு வழிகளில் விண்ணப்பிக்க இயலும்
12) *நான் களஞ்சியம் ஆப்/ Web portal வழியாக* *விண்ணப்பிக்க இயலவில்லை*
*அல்லது*
*விண்ணப்பித்தேன் ஆனால் எங்கள் அலுவலகத்தில் வரவில்லை என்கிறார்கள்?*
Approval group mapping சரியாக உள்ளதா என்று பாருங்கள்...
13) *சரண்டர் தனியே கணக்கிடு செய்து உள்ளீடு செய்ய வேண்டுமா?*
தேவையில்லை களஞ்சியம் தானே 15 நாட்களுக்கு கணக்கீடு செய்து வழங்குகிறது...
நாம் தொகை எதுவும் உள்ளீடு செய்ய வேண்டாம்
14) *Bill preparation staff/DDO செய்ய வேண்டியது?*
முன்னேற்பாடு நடவடிக்கைகள்
அ) leave process reports download செய்து அனைத்து பணியாளர்களின் last surrender details சரியாக உள்ளதா என சரி பார்ப்பது
ஆ) தவறாக உள்ளது/ அல்லது தகவல் இல்லை எனில்... e SR part 1 இல் சரியான விவரங்களை update செய்தல்
இ) அனைத்து பணியாளர் EL balance details call web ADI மூலம் பதிவேற்றம் செய்தல் .
இவை மூன்றும் முன்னேற்பாடுகள்...
( IFHRMS kalanjium SLS steps தனியே பகிர்கிறேன்)
15) *DDO proceedings?*
களஞ்சியத்தில் SLS proceedings auto generation/ attachments ஆக வருகிறது.
( Proceedings இல் தற்போது last surrender details இல் தற்போதைய (1-oct-2025 ) தேதி தான் வருகிறது இந்த error விரைவில் சரி செய்து விடுவார்கள்)
கூடுதல் வினாக்கள்
16) *பணிப் பதிவேடு அலுவலகத்தில் இல்லை , வெளியே சென்றுள்ளது*
*சரண்டர் போடலாமா?*
பணிப் பதிவேடு பதிவுகள் கட்டாயம் தேவை...
SLS விதிமுறைகள் படி due date இல் இருந்து ஒரு மாதத்திற்கு முன் முதல் ஒரு மாதத்திற்கு பின் வரை விண்ணப்பிக்க இயலும்
அதில் இருந்து 15 நாட்களுக்கு உள் காசக்கப்படவேண்டும்
அதாவது due date இல் இருந்து 45 நாட்களுக்குள் காசக்கப்படவேண்டும்..
17) *due date இல் கட்டாயம் சரண்டர் செய்ய வேண்டுமா?*
- Due date இல் சரண்டர் செய்ய தகுதி..
- சரண்டர் செய்வதும்
- செய்யாமல் இருப்பதும் தனிநபர் விருப்பம்...
18) *வழக்கமான due date ஐ மாற்ற இயலுமா?*
SLS விதிமுறைகள் படி advance ஆக்க முடியாது ஆனால் (1/10 க்கு பிறகு எனில்) பின்னோக்கி செல்ல இயலும்...
உதாரணமாக உங்கள் வழக்கமான due date 15/10 எனில் அதை நவம்பர் டிசம்பர் மாததிற்கு பின்னோக்கி கொண்டு செல்ல இயலும்...
15/10 க்கு முன் தான் கொண்டு செல்ல இயலாது...
இந்த நடைமுறை தற்போது களஞ்சியத்திலும் பின்பற்ற இயலும் என நினைக்கிறேன்...
19) *1/10 வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு...*
*1/10 சரண்டர் ...*
*SLS ஆண்டு ஊதிய உயர்வு சேர்ந்து வருமா?*
முதலில் 1/10 ஆண்டு ஊதிய உயர்வு process செய்து விட வேண்டும்...
அதன் பிறகு surrender preparation எனில் கட்டாயம் ஊதிய உயர்வு உடன் சரண்டர் கிடைக்கும்...
( சரியாக வருகிறது)
20) *விடுப்பில்/விடுமுறை தினத்தில் due date இருந்தால் surrender செய்யலாமா?*
ஆம் CL/EL/RL/ ML / maternity leave/ holiday இல் due date வந்தாலும் surrender செய்யலாம்.
Foreign service ( அயல் பணியில் இருக்கும் போதும்) surrender செய்யலாம்...
1) EOL without MC ( loss of pay)
2) UEL on PA ( half pay leave)
3) Suspension period
இந்த மூன்றில் இருக்கும் போது மட்டுமே surrender செய்ய இயலாது .
21) *surrender pay இல் என்ன என்ன eligible?*
Pay
DA
HRA
CCA
Hill allowance
PP (2000)
(IFHRMS kalanjium இல் 2000 PP க்கு 1000 SLS எடுத்துக் கொண்டு தான் வருகிறது) ✅
( நேற்று SLS Bill கருவூலத்தில் (PP 1000 உடன் சேர்ந்து) சமர்ப்பித்த போது அவர்கள், PP eligible ஆ என சந்தேகம் எழுப்புகிறார்கள் )
22) *SLS surrender DA 58% வருமா?*
தமிழக அரசு 58% அரசாணை வெளியீடு செய்த பிறகு SLS DA 58% எடுத்துக் கொண்டு வரும் ..
அதுவரை 55%...
(விரைவில் மாற்றம் வரும்)
23) *individual proceedings ஆக வருகிறது.. SLS bills உம் தனித் தனியே தான் தயாரிக்க வேண்டுமா?*
இல்லை... Proceedings மட்டும் தனித் தனியே தான் வருகிறது...
ஆனால் ஒரு Bill group இல் நான்கு நபர்கள் எனில் அவர்களுக்கு மொத்தமாக ஒரே SLS Bill ஆக தயாரிக்க முடிகிறது..
24) *HM க்கு proceedings CEO/ DEO office தான் வழங்க வேண்டுமா?*
ஆம் high school HM/
HM incharge ஆக இருப்பவர்கள் DEO விடம்
HR SEC HM / HM incharge இல் இருப்பவர்கள் CEO விடம் தான் அனுமதி வாங்க வேண்டும்...
( Bill approval group mapping தனியே செய்ய வேண்டும்).
25) *ஒரு பணியாளர் kalanjium app, web portal வழியாக விண்ணப்பிக்க இயலவில்லை/ தெரியவில்லை அவருக்கு சரண்டர் போட இயலாதா?*
1) individual apply
2) web portal apply
Strongly recommended
But
தனிநபர் SLS க்கு எழுத்துப் பூர்வமாக விண்ணப்பிக்கும் போது
Initiator I'd வழியாக உள்ளே சென்று SLS initiate செய்து Bill preparation செய்ய முடிகிறது..
தகவலுக்காக...
No comments:
Post a Comment