களஞ்சியம் மொபைல் ஆப் அல்லது Self Service Portal மூலம் சரண்டர் லீவ் (SLS) விண்ணப்பிப்பது குறித்து
Click Here to Download - EL - Surrender Leave Salary (SLS) - Instructions & Directions - Pdf
அனைத்து பணியாளர்களும் அறிந்திருக்க வேண்டியது என்னவெனில், 01.10.2025 முதல் Earned Leave Surrender (சரண்டர் லீவ்) விண்ணப்பங்கள் களஞ்சியம் மொபைல் ஆப்பின் மூலமாகவும் (மேலும் Self Service Portal மூலமாகவும்) சமர்ப்பிக்கலாம். பணியாளர்கள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
DDO-க்களுக்கு அறிவுறுத்தல்கள்:
அனைத்து பணியாளர்களின் விடுப்பு இருப்பு (Leave Balance) முறையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதைக் உறுதி செய்ய வேண்டும்.
2020 ஏப்ரல் மாதத்திற்கு முன் பணியாளர்கள் பெற்ற சரண்டர் லீவ் விவரங்களை, தேவையான இடங்களில், eSR Part I-ல் பதிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு விண்ணப்பமும் தகுந்த அங்கீகரிப்பு அதிகாரிகளிடம் தாமதமின்றி செல்ல Approval Group-ஐ சரியாக Map செய்ய வேண்டும்.
பணியாளர் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் அங்கீகார நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிஸ்டம் உருவாக்கும் அனுமதி ஆணையை (Sanction Order) பயன்படுத்தி பில் தயாரித்து, அதன்பின் சரண்டர் லீவ் தொகையை விடுவிக்க வேண்டும்.
அனைவரும் மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்து, சரண்டர் லீவ் விண்ணப்பங்களை தடையின்றி செயல்படுத்த வேண்டுகிறோம்.
Click Here to Download - EL - Surrender Leave Salary (SLS) - Instructions & Directions - Pdf
No comments:
Post a Comment