ஆசிரியர் பணித் தகுதிச் சிக்கல் - விரைவான தீர்வு தேவை - இந்து நாளிதழ் கட்டுரை - Asiriyar.Net

Thursday, October 9, 2025

ஆசிரியர் பணித் தகுதிச் சிக்கல் - விரைவான தீர்வு தேவை - இந்து நாளிதழ் கட்டுரை

 

செப்டம்பர் 1, 2025ஆம் நாளன்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், 


உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்கள் அமர்வு அளித்த தீர்ப்பு, அனைத்து மாநிலங்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ‘


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் இருப்பதை அனுமதிக்க முடியாது; ஐந்து ஆண்டு​களுக்குக் குறைவான பணிக்​காலம் உள்ளவர்கள் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் தொடரலாம்’ எனப் பல கட்டுப்​பாடுகள் தீர்ப்பில் உள்ளன.


ஓர் ஆசிரியரின் பணிக்கால அளவை (length of service) ஆசிரியர் பணியைத் தொடர்​வதற்கும் பதவிஉயர்வு பெறுவதற்கும் உரிய தகுதியாக ஏற்றுக்​கொள்ள முடியாது என்றும் தீர்ப்பில் சொல்லப்​பட்​டுள்ளது. ஆசிரியர் பதவி உயர்வுகள் / சம்பள உயர்வுகள், பணிக்​காலம் அல்லது பணி மூப்பு (seniority) அடிப்​படைக்கு மாறாகப் பணி மதிப்​பீட்டின் அடிப்​படையில் மட்டுமே பின்பற்​றப்​படும் என்று தேசியக் கல்விக் கொள்கை 2020இல் கூறப்​பட்​டுள்ளதை இத்தீர்ப்பு வழிமொழிந்துள்ளது.



\

No comments:

Post a Comment

Post Top Ad