16 ம் தேதி முதல் போராட்டம் - JACTTO GEO அறிவிப்பு - Asiriyar.Net

Thursday, October 9, 2025

16 ம் தேதி முதல் போராட்டம் - JACTTO GEO அறிவிப்பு

 



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின், ஜாக்டோ - ஜியோ வெளியிட்ட அறிக்கை:


நான்கரை ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கையில், சரண் விடுப்பு தவிர, வேறு எந்த கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றவில்லை. வரும் 16ம் தேதி, கோரிக்கை அட்டை அணிந்து, அனைத்து வட்டாரங்களில் ஆர்ப்பாட் டம் நடத்தப்படும்.


நவ.,18ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். அதன்பின், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad