PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு 2025 - சம்பள விவரம், கல்வித்தகுதி என்ன? என்னென்ன பாடங்களில் நிரப்பப்படுகிறது? - முழு விவரம் - Asiriyar.Net

Thursday, July 10, 2025

PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு 2025 - சம்பள விவரம், கல்வித்தகுதி என்ன? என்னென்ன பாடங்களில் நிரப்பப்படுகிறது? - முழு விவரம்

 




தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் கீழ் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 1,996 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அரசு பள்ளியில் ஆசிரியர் ஆக வேண்டும் என காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பை ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வில் மொத்தம் 1,996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


முதுகலை ஆசிரியர் தேர்வு 2025

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வித்துறை மட்டுமின்றி ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, சென்னை மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகளில் கீழ் உள்ள 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் முதுகலை ஆசிரியர் பதவிக்கு மட்டும் 1,837 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் கடந்த ஆண்டுகளில் உள்ள Backlog காலிப்பணியிடங்கள் 78 மற்றும் தற்போது உள்ள 1,759 காலிப்பணியிடங்கள் என நிரப்பப்படுகிறது.


என்னென்ன துறைகளில் எவ்வளவு காலிப்பணியிடங்கள்?

  • பள்ளிக் கல்வி இயக்குநரகம் 1,777
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு நலத்துறை 23
  • ஆதிதிராவிடர் நலத்துறை 83
  • பழங்குடியினர் நலத்துறை 31
  • சென்னை மாநகராட்சி 43
  • கோயம்புத்தூர் மாநகராட்சி 16
  • மதுரை மாநகராட்சி 4
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 12
  • தமிழ்நாடு வனத்துறை 7
மொத்தம் 1,996


என்னென்ன பாடங்களில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது?

மொத்தம் 12 பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறிப்பாக இயற்பியல், கணிதம், வேதியியல் தமிழ் ஆகிய பாடங்களில் அதிகப்படியான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

  • இயற்பியல் - 233
  • கணிதம் - 232
  • வேதியியல் - 217
  • தமிழ் - 216
  • வணிகவியல் - 198
  • ஆங்கிலம் - 197
  • பொருளியல் - 169
  • தாவரவியல் - 147
  • விலங்கியல் - 131
  • வரலாறு - 68
  • புவியியல் - 15
  • அரசியல் அறிவியல் - 14


இவையில்லாமல் கணினி பயிற்றுநர் பதவிக்கு 57 பணியிடங்கள், உடற்கல்வி இயக்குநர் பதவிக்கு 102 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


முதுகலை ஆசிரியர் கல்வித்தகுதி

மொழி பாடங்கள் உட்பட முதுகலை ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அந்தந்த பாடங்களுக்கான முதுகலை பட்டப்படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதியை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்வியியல் நிறுவனத்தில் B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது)


முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன், தேசிய ஆசிரியர் கவுன்சில் விதிமுறைகள் 2002 கீழ் உட்பட்டு B.Ed படிப்பை முடித்திருக்க வேண்டும். (அல்லது)


அதே போன்று, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.A.Ed.,/ B.Sc.Ed உள்ளிட்ட ஒங்கிணைந்த பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் ஒரே பாடத்தை கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிகரான கல்வித்தகுதி குறித்த விவரங்களை https://tnsche.tn.gov.in/en/equivalence/ என்ற இணைப்பில் அறிந்துகொள்ளலாம்.


கணினி பயிற்றுநர் பதவிக்கு என்ன கல்வித்தகுதி?

கணினி பயிற்றுநர் பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதற்கான முதன்மை பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன், B.Ed முடித்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் B.Ed பெற்று, முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.


உடற்கல்வி இயக்குநர் பதவிக்கான கல்வித்தகுதி

உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பதவிக்கு B.P.Ed/ BPE/ உடற்கல்வி மற்றும் விளையாட்டில் B.Sc ஆகியவை படித்திருக்க வேண்டும். அதே போன்று, 4 வருட ஒங்கிணைந்த பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். M.P.Ed படித்தவர்களும் தகுதியானவர்கள் ஆவார்கள்.


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதிகள்?

முதுகலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் சிறப்பு கல்விக்கான B.Ed முடித்திருக்க வேண்டும் (அல்லது) B.Ed முடித்து பார்வைக் குறைபாடுள்ள / கேட்கும் குறைபாடுள்ளவர்களுக்கு கற்பித்தல் பாடத்தில் சீனியர் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.


முதுகலை ஆசிரியர் சம்பள விவரம்

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய பதவிகளுக்கு ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.




செப்டம்பரில் தேர்வு

1,996 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இன்று (ஜூலை 10) முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். ஆகஸ்ட் 12- வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தொடர்ந்து, விண்ணப்பதார்களுக்கு செப்டம்பர் 28-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


SGT - List of selected candidates District Wise


பணி நியமனத்துக்கு மாவட்ட வாரியாக தேர்வாகியுள்ள இடைநிலை ஆசிரியர்கள் விவரம் :


  • Ariyalur - 24
  • Chengalpattu - 37
  • Chennai - 22
  • Coimbatore - 63
  • Cuddalore - 86


  • Dharmapuri - 113
  • Dindigul - 91
  • Erode - 107
  • Kallakurichi - 82
  • Kancheepuram - 34


  • Kanniyakumari - 24
  • Karur - 61
  • Krishnagiri - 64
  • Madurai - 122
  • Mayiladuthurai - 16


  • Nagapattinam - 53
  • Namakkal - 50
  • Perambalur - 23
  • Pudukottai - 60
  • Ramanathapuram - 67


  • Ranipet - 37
  • Salem - 134
  • Sivagangai - 59
  • Tenkasi - 66
  • Thanjavur - 78


  • The Nilgiris - 11
  • Theni - 67
  • Tuticorin - 64
  • Tiruchirappalli - 87
  • Tirunelveli - 35


  • Tirupathur - 35
  • Tiruppur - 65
  • Tiruvallur - 66
  • Tiruvannamalai - 93
  • Tiruvarur - 56


  • Vellore - 33
  • Villupuram - 60
  • Virudhunagar - 97


Total = 2342


இடைநிலை ஆசிரியர்கள் & ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான ஒதுக்கீடு விவரம்


* இடைநிலை ஆசிரியர்கள் & ஆசிரியர்களுக்கு 8% ஒதுக்கீட்டின் படி 106 பணியிடங்களும்,  ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீடாக 12 பணியிடங்களும் உள்ளது.



G TRB - தேர்வர்கள் விண்ணப்பித்தலுக்கான நேரடி இணைய இணைப்பு...


Click Here - PG TRB - Exam Candidates Apply Now - Direct Link




No comments:

Post a Comment

Post Top Ad